
புத்தாண்டு காலத்தில், வெளி மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு, இலங்கை பேருந்து சாலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில், டீசலை வழங்கத் தீர்மானித்துள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி, மொரட்டுவை. தலங்கம, மஹரகம முதலான இலங்கை பேருந்து சாலைகளுக்கு சொந்தமான எரிபொருள நிரப்பு நிலையங்களில், ஒரு லீற்றர் டீசல் 125 ரூபாவுக்கு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.