
2021 பெரும் போகத்தின் போது பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடாக 210 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கே மேற்படி இழப்பீடுத் தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
காப்புறுதித் திட்டத்தின் கீழ் 8,678 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000-க்கு உட்பட்டு, ஊக்கத் தொகை இல்லாமல் 210 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
முறைப்படி இழப்பீடு கோரி விண்ணப்பித்து ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் அந்தந்த கமநல சேவை மையத்தின் ஊடாக மாவட்ட விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகத்தில் முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.