புதிதாக ஐந்து டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 5 டெல்டா தொற்றாளர்கள் உட்பட 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலையில் 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவ்வாறு 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த தொழிற்சாலையில் 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 20 பேருடைய பரிசோதனை மாதிரிகள் ஜயவர்தன பல்கலைகழகத்திற்கு அனுப்பப்பட்டதுடன் அதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த 11 பேரில் தெரிவு செய்யப்பட்ட 6 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply