வவுனியாவில் சூம் வகுப்புக்களை திட்டமிட்டு குழப்பும் விசமிகள்!

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சூம் வகுப்புக்களை சிலர் திட்டமிட்டு குழப்பி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் கொவிட் விடுமுறைக் காலத்திலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாக சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் ஆசிரியர்களால் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

இந்நிலையில், வவுனியாவில் இடம்பெறும் சில சூம் வகுப்புக்களை, சிலர் குறித்த வகுப்பு இணைப்பை பெற்று அதற்குள் நுழைந்து அவற்றை குழப்பும் நோக்குடன் நாகரிகமற்ற வகையில் சொல்லாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சில ஆசிரியர்கள் மன உளைச்சளுக்கு உள்ளாகியுள்ளதுடன், மாணவர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதேவேளை, குறித்த செயற்பாட்டால் பாதிப்படைந்த ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply