கையூட்டு பெறமுயன்ற இராணுவ சிப்பாய்கள் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம் கப்பம் கோரிய இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் 15 ஆயிரம் ரூபா கையூட்டலை பெற முற்பட்டபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், சீதுவை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் இருந்து கையூட்டல் பெறமுயன்ற இராணுவ சிப்பாய் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் சுமார் 80 ஆயிரம் ரூபாவை கையூட்டலாக பெற முனைந்த போது கைதானதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள் மூவரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply