ரி-20 தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் செல்லும் அவுஸ்ரேலியா அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, பங்களாதேஷூக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்செயலாக, கொவிட்-19 தொற்றுகள் பங்களாதேஷில் அதிகரித்து வருகின்ற போதிலும், கிரிக்கெட் அவுஸ்ரேலியா உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தி அடைவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒகஸ்ட் 2ஆம் திகதி இத்தொடர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் பங்களாதேஷ் இருவரும் முறையே மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வேயில் இருந்து டாக்காவுக்கு ஜூலை 29ஆம் திகதி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து ரி-20 போட்டிகளும் முறையே ஒகஸ்ட் 2ஆம், 3ஆம், 5ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் ஆகிய திகதிகளில் நடைபபெற உள்ளது.

Leave a Reply