யாழில் வீட்டுத்திட்டம் பெறுவதற்கு அல்லோலப்படும் மக்கள் – உருட்டும் பிரட்டுமாக அரச அதிகாரிகள் அசமந்தம்

யாழ்.மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளி தெரிவில் புள்ளி வழங்கலில் பாரிய தில்லு முல்லு இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் வீட்டுத்திட்ட பயனாளி தெரிவு தொடர்பில் ஆட்சேபனைகள் இருக்குமாயின் தொிவிக்கும்படி மாவட்ட செயலர் கோரியிருந்தார்.

இந்நிலையில் முறைப்பாட்டாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு தமது முறைப்பாடுகளை எழுத்து மூலம் அனுப்பியிருந்தனர்.

Advertisement

வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு பிரதேச செயலக அதிகாரிகளால் வழங்கப்பட்ட பதில்கள் யாரோ ஒரு பகுதியின் பட்டியலை அல்லது யாரோ ஒரு குழுவின் சிபார்சினை காப்பாற்ற

வழங்கப்பட்ட பதில்கள் என்பது அம்பலமாகியுள்ளது. கிட்டத்தட்ட பயனாளிகள் தெரிவுக்காக பிரதேச செயலகங்கள் ஊடாக பயனாளிகளின் தகுதிகள் தொடர்பில்

ஒன்பது வகையாக கேள்வி கேட்கப்பட்டு அவற்றுக்கான பதில்களின் அடிப்படையில் புள்ளி இடப்பட்டது. அதிகப்படியான புள்ளி அடிப்படையில்

பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறனான புள்ளி அடிப்படையிலான பயனாளி தேர்வை ஒரு சில பிரதேச செயலகங்களில் காணவில்லை.

50 புள்ளியை பெற்ற ஒருவர் பயனாளி பட்டியலுல் இருந்த விலக்கப்பட்டு 45புள்ளி பெற்றவர் வீட்டு திட்டத்துக்கான தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இதற்கான காரணத்தை தேடியபோது 50 புள்ளிகள் பெற்ற குடும்பம் 4 அங்கத்தவர்களை கொண்டதாகக் காணப்பட்டதால் 45 புள்ளியை பெற்ற குடும்பம்

6 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஆகையால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஒரு கிராம சேவையாளர் பிரிவில்

45 புள்ளிகளைப் பெற்ற 5 குடும்ப உறுப்பினர்களை கொண்ட மூன்று குடும்பங்கள் வீட்டு திட்டத்துக்கான தெரிவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில்

அதே கிராம சேவையாளர் பிரிவில் 45 புள்ளிகளை பெற்ற 6 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் தெரிவு செய்யப்படவில்லை.

மேலும் 2009 க்கு முன்னர் திருமணம் முடித்தவரா? என பயனாளி தேர்வுக்கான படிவத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு ஆம் என பதிலளிக்கப்பட்ட நிலையில்

10 புள்ளிகள் வழங்கிவிட்டு அதே விண்ணதாரிக்கு வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டமைக்காக வழங்கப்பட்ட ஏழுத்துமூல விளக்கத்தில்

2009ம் ஆண்டுக்கு முன் திருமணம் முடிக்காமையால் வீட்டுத்திடம் வழங்க முடியவில்லை என கூறப்பட்டிருக்கின்றது.

அனவர்களுக்கு மட்டும் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என புள்ளி பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. 2009க்கு பின்னர் திருமணம் செய்திருந்தால்

அந்த விண்ணபதாரிக்கு 15 புள்ளிகள் வழங்கப்படவேண்டும். ஆனால் மேற்படி விண்ணப்பதாரிக்கு வெறும் 10 புள்ளிகளே வழங்கப்பட்டுள்ளது.

2003ல் பதிவுத் திருமண அத்தாட்சி பத்திரம் உள்ள குடும்பத்தை 2009க்கு பின்னர் திருமணமானவர் என பிரதேச செயலக அதிகாரிகள் பதில் வழங்கியிருப்பது

பழைய பட்டியலை பழைய பட்டியலாகவே வைத்திருக்க முயற்சிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது.

இது இவ்வாறு இருக்க சில கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து வீட்டுத் திட்டத்திற்கான முறைப்பாடுகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதும்

பிரதேச செயலகத்தால் பதில் வழங்காத நிலைமை காணப்படுகிறது. ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பயனாளிகள் தெரிவுப் பட்டியலில் உள்ள

சந்தேகங்களை உரிய வகையில் உறுதி செய்யாத வகையில் வீட்டுத் திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மீள் எழுவதை தவிர்க்க முடியாது போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *