இரு வாள்களுடன் யாழில் ஒருவர் கைது

யாழ். பொன்னாலைப் பகுதியில் உள்ள நபரொருவரிடம் இருந்து, சந்தேகத்துக்கு இடமான வகையில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொன்னாலைப் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீடு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, சந்தேக நபரிடமிருந்து இரு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply