
உலகின் இரண்டாவது அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக, ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீபன் ஹெங்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சிம்பாப்வே மட்டுமே இலங்கைக்கு மேலே உள்ளது. லெபனான், சூடான், ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை தாண்டி இலங்கை பணவீக்கம் சாதனை அளவில் உயர்ந்துள்ளது என்பதை பேராசிரியரின் அட்டவணை காட்டுகிறது.இந்த வார பணவீக்க அட்டவணையில், இலங்கை மீண்டும் ஒருமுறை தீவிரமான ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது, பணவீக்கம் 132 சதவீதமாக உள்ளது என பேராசிரியர் ஸ்டீவன் ஹெங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.