யாழில் இடம்பெற்ற இரத்ததான முகாம்-பல இளைஞர்கள் பங்கேற்பு

யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றிய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழகம் மற்றும் லயன்ஸ் கழகம் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை லொயலாஸ் திருமண மண்டபத்தில் இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் ஐம்பது பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானத்தை சிறப்பாக மேற்கொண்டனர்.

எனினும் இந்நிகழ்வில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர்,இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்,யாழ்ப்பாண லயன்ஸ் கழகத் தலைவர்,யாழ் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ,பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர்,கே.கே.பி கழக செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply