அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை நாளை (வெள்ளிக்கிழமை) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்தார்.
எரிபொருளைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.