குழந்தைகளுக்கான ஃபைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் தாமதம்!

<!–

குழந்தைகளுக்கான ஃபைஸர் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதில் தாமதம்! – Athavan News

குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஃபைஸர் தடுப்பூசி நவம்பர் மாதம் வரையில் கிடைக்கப்பெறப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஆராய்ச்சியை சமர்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றிய சமீபத்திய ஆய்வின் தரவை சுகாதார கட்டுப்பாட்டாளர்களுக்கு வழங்கியதாக கூறும் ஃபைஸர் நிறுவனம், இதனை அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சான்றுகளை மறுபரிசீலனை செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் ஆகலாம் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply