’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு!

’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு!

இலங்கையின் கல்வி மட்டத்தில் வடக்கு மாகாணம் 9ஆவது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளின்படி உறுதியாகியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

வடக்கு மாகாணத்தின் பல கிராம மட்ட பாடசாலைகளின் பரீட்சை முடிவுகள் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த கல்வி உயர்தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஒன்பதாவது இடத்திலிருந்து வடக்கு மாகாணம் ஆறாவது இடத்தை எட்டியமைக்கு காரணமான கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் 72விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சித்தி பெற்றிருக்கின்றனர் என்பது நம்பிக்கையைத் தந்துள்ளது. – என்று தெரிவித்தார்.

Leave a Reply