வீட்டுத்திட்டப் பணியாளர்களுக்கு– பணம் வைப்­பிட்ட புத்­த­கத்தை அங்­க­ஜன்­தான் வழங்­கு­வா­ராம்!

வீட்டுத்திட்டப் பணியாளர்களுக்கு– பணம் வைப்­பிட்ட புத்­த­கத்தை
அங்­க­ஜன்­தான் வழங்­கு­வா­ராம்!

யாழ்ப்­பா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் வீட்­டுத் திட்­டத்­துக்­கு­ரிய நிதி­களை பய­னா­ளி­க­ளின் வங்­கிக் கணக்­கில் வைப்­பி­லிட்ட புத்­த­கத்தை, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­த­னின் ஒருங்­கி­ணைப்­புக்­குழு அலு­வ­ல­கப் பிர­தி­நி­தி­களே பய­னா­ளி­க­ளி­டம் வழங்­கு­வார்­கள் என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் க.மகே­சன் அறி­வித்­துள்­ளார்.

போரி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்ட இறு­திப் பய­னா­ளி­க­ளின் பட்­டி­யல் இணைத் தலை­வர்­க­ளின் அனு­மதி கிடைக்­கப்­பெற்­ற­தும் பிர­தேச செய­லர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­துள்ள மாவட்­டச் செய­லர் க.மகே­சன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­த­னின் கடந்த 15ஆம் திக­திய கடி­தத்­துக்கு அமை­வாக சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு பிர­தேச செய­லர்­க­ளைப் பணித்­துள்­ளார்.

தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு கொடுப்­ப­ன­வு­களை வழங்­கும்­போது வங்­கிப் ­புத்­த­கங்­களை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­கள் மூலம் பய­னா­ளி­க­ளின் வீடு­க­ளுக்கே நேர­டி­யா­கச் சென்று வழங்கி அர­சின் ‘சுபீட்­சத்­தின் நோக்கு கொள்­கைத் திட்­டங்­களை’ தெளி­வு­ப­டுத்­த­வுள்­ள­னர் என்­றும் அதற்கு பிர­தேச செய­லர்­களை ஒத்­து­ழைப்பு வழங்­கு­மா­றும் மாவட்­டச் செய­லர் கோரி­யுள்­ளார்.

வீட்­டுத்­திட்­டத்­தில் அர­சி­யல் தலை­யீட்­டால் தகு­தி­யற்­ற­வர்­கள் தெரிவு செய்­யப்­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டுக் கார­ண­மாக பய­னா­ளி­கள் பட்­டி­யல் மீள் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் கார­ண­மாக 300 இற்கு மேற்­பட்­டோர் நீக்­கப்­பட்டு புதிய பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply