மகள் சரியாக படிக்கவில்லை- தும்புத் தடியால் அடித்தே கொன்ற தந்தை! தாயின் பகிர் வாக்குமூலம்

காலி – மகாமோதர சியம்பலகஹவத்த பகுதியில் வசிக்கும் தந்தை ஒருவர், தனது மகள் படிக்காததன் காரணமாக தும்பு தடி மூலம் கொடூரமாக அடித்த நிலையில், 16 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி பலத்த காயமடைந்து நேற்று காலி கராபிடிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இன்று காலை உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு உயிரிழந்த மாணவி, காலி – மகாமோதர சியம்பலகஹவத்த பகுதியில் வசிக்கும் 11 ஆம் வகுப்பில் கற்கும் 16 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தாயார் , மகள் வீட்டுப்பாடம் செய்யாததால் தான் தந்தை அவரின் தலையில் தும்பு தடியினால் அடித்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியாசாலை வைத்து பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 3.00 மணியளவில் நடந்ததுள்ளதாகவும், தந்தை அடித்ததன் பின்னர் அவரது தாயிடம் அவரது தலை உணர்வின்றி இருப்பதாக தெரிவிக்கவே, குறித்த மாணவியை உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதோடு இது தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply