அரசியல் கைதிகள் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு!

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மோகன் பாலேந்திரா மூலம் அரசியல் கைதிகள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆயியோரும் இந்த மனு மீதான விசாரணையின்போது அரசியல் கைதிகள் சார்பில் ஆஜராகி தமது வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

Leave a Reply