அடுத்த ஆறு மாதங்களுக்கான நாட்டின் எதிர்கால பொருளாதாரத் திட்டம் நாளை வெளியிடப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அறிவித்துள்ளார்.
இந்த ஆறு மாத பொருளாதாரத் திட்டம் நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கியதாக காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்க நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.