சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமே இம்முறையும் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகிய இரு செயற்பாடுகள் காரணமாகவே தற்போது கொரோனா தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா பரவலைத் தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு நாடு முடக்கப்படுவதன் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மதிப்பிட முடியாதவை.

அதனைக் கருத்திற் கொண்டு நாட்டை முடிந்தளவிற்கு விரைவாக திறப்பதே தற்போதைய தேவையாகவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply