ஒரேநாளில் வெளியாகும் சமுத்திரகனியின் இரண்டு திரைப்படங்கள்!

இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் உருவான இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விநோதய சித்தம், உடன் பிறப்பே என்ற இரண்டு திரைப்படங்களே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நேரடியாக வெளியாகவுள்ளன.

விநோதய சித்தம் திரைப்படத்தில் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் உடன் பிறப்பே திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply