ஹப்புத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

ஹப்புத்தளை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை 19 வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை பிரதேச சபையின் தவிசாளர் கந்தசாமி கண்ணா அவர்களினால் இன்று (வியாழக்கிழமை) சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டமையானது இலங்கையின் பிரதேச சபைகளின் வரவு செலவு திட்ட அறிக்கைகளில் முதன்முதலில் வரவு செலவு திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்ட பிரதேச சபையாக அப்புத்தளை பிரதேச சபை உள்ளது.

இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆறு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 7 உறுப்பினர்களும் 2022 அப்புத்தளை பிரதேச சபைக்கான வரவு செலவு திட்ட அறிக்கான ஆதரவினை வழங்கியிருந்தனர் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினர் அப்புத்தளை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கைக்கு  எதிராக  வாக்களித்தார்.

மேற்படி அப்புத்தளை பிரதேச சபையின் 2022 க்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை 19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது

Leave a Reply