உடல் பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியேறிய நபர் சடலமாக மீட்பு..!

உடல் பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியேறிய நபர் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதுடைய மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரை 28.09.2021 அன்று காலை 6.00 மணியில் இருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்த நிலையில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டார்.

மேலும் அவரது மனைவி மானிப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்த நிலையில் இன்று நவாலி கிணற்றில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply