கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தொடக்கம் 19 வயது வரையான நாள் பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறுகின்றவர்கள், உளநலம் பாதிக்கப்பட்டவர்கள், உள நலம் குன்றியவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை, உளநல சிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் நாள்பட்ட நோயை உடைய பதிவு செய்யாத சிறுவர்கள் அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெயர்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
மேலும் பதிவு செய்து கொள்பவர்களுக்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
அத்தோடு பெற்றோர்கள் குறித்த சந்தர்ப்பத்தை தவற விடாது பிள்ளைகளை அழைத்து வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் நிமால் அருமைநாதன் கேட்டுக்கொண்டார்..