42 நாட்களின் பின்பு நாடு இன்று திறக்கப்பட்டது!

தொடர்ந்து 42 நாட்கள் அமுலாகி வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 04 மணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக மாகாணங்களுக்கு வெளியே செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 15ம் திகதி வரை மாகணங்களுக்கு இடையே போக்குவரத்து தடை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply