யாழில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் இயல் பிரிவில் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply