யாழில் 12-19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடையோருக்காக பைசர் தடுப்பூசி – தவற விடாதீர்கள்

12-19 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கலை மக்கள் தவற விடாது கொரோனா நோய்க்குரிய தடுப்பூசியை விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோய் உடையோர் 12தொடக்கம் 20 வயதுக்குட்பட்டோர் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான முறையில் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுங்கள் என குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.அருண் மொழி தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கும் வேலைத் தட்டத்தினை ஆரம்பித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாடளாவிய ரீதியில் 12வயதுக்கு மேற்பட்ட 20 வயதுக்குட்பட்ட நாட்பட்ட நோய் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது இன்று தொடக்கம் ஒரு வாரத்திற்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற வுள்ளது.

ஏற்கனவே இது சம்பந்தமான விடயங்களை பத்திரிகைகள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மக்களுக்கு தெரிய படுத்தப்பட்டுள்ளது யாழ் மாவட்டத்தில் நான்கு வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது நடைபெறுகின்றது தெல்லிப்பளை, பருத்தித்துறை ஊர்காவற்துறை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டமானது ஆரம்பமாகி நடைபெறுகின்றது யாழ் போதனா வைத்தியசாலை விடுதி 05 ல் இதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

14 விடயங்கள் உள்ளவர்களுக்கு மாத்திரம் இந்த தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது அவர்கள் ஒரு பொது வைத்திய நிபுணர் அல்லது ஒரு குழந்தை வைத்திய நிபுணர் ஊடாகவோ வழங்கப்படும் சிபாரிசின் அடிப்படையில் மிகவும் பாதுகாப்பான முறையாக தடுப்பூசி வழங்கப்படுகின்றது

தடுப்பூசி வழங்குவதை ஏற்படுத்தி தந்த சுகாதார அமைச்சுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும் இந்த சந்தர்ப்பத்தை மக்கள் தவற விடாது கொரோனா நோய்க்குரிய தடுப்பூசியை விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோய் உடையோர் 12தொடக்கம் 20 வயதுக்குட்பட்டோர் அனைவரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் தங்களுடைய பிள்ளைகளை கூட்டிவந்து பாதுகாப்பான முறையில் தடுப்பூசியில் பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Leave a Reply