பிரபல பாடகர் கைது! பின்னணியில் திடுக்கிடும் காரணம்!

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியில் போட்டியிடும் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாடகரால், சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சிறுமி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருவது,

கந்தானை – வெலிகம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 15 வயததுடைய பாடசாலை மாணவி ஒருவர், குறித்த பாடகரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கந்தாணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சியில் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் தற்போது போட்டியிடும் 19 வயது இளைஞர் ஒருவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்

அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி தனது வீட்டில் வைத்தே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் வல்பொல ரெங்ககவில பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரின் தந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் என்பதும், தாய் பொது அரசு வைத்தியசாலையில் பணிபுரியும் செவிலியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply