கொடிகாமத்தில் பட்டா வாகனத்துடன் மோதியதில் ஒருவர் பலி

tataபட்டா படி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் உசனில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்ட ரக வாகனத்தின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply