இன்னும் ஒரு வாரத்தில் அரிசியின் விலையைக் குறைப்போம்! – வாசுதேவ நாணயக்கார

அரிசி விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இடமளிக்க முடியாது என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டரிசியின் விலை ரூ.100 ஆகக் குறைக்கப்படும் என்றும் அதற்காக மற்றொரு வாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டரிசி ரூபா 100 ஆக குறைக்கப்படும் என்றும், பிறகு நாட்டரிசியை 112 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என அனைவருக்கும் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply