லடாக் எல்லையில் இராணுவத் தளபதி திடீர் ஆய்வு

லடாக் எல்லையில் இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, திடீரென ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

லடாக் எல்லையில் சீனா இராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

ஆகவே, சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை நிலை நிறுத்தியுள்ளது.

இதனால் இந்தியா- சீனா விவகாரத்தில் மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

இதன்போது பாதுகாப்பு படையினருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply