உத்தரப் பிரதேசஅரசு திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமனம்

உத்தரப் பிரதேச அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பர தூ துவராக நடிகை கங்கனாவை நேற்று (வெள்ளிக்கிழமை) நியமித்துள்ளார்.

குறித்த நிகழ்வின்போது ராமர்  ஆலயத்தின் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட நாணயத்தை கங்கனாவுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசளித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளதாவது, ”தேஜஸ்’ படப்பிடிப்பின் ஒத்துழைப்புக்காக உத்தரபிரதேச அரசுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.

வரவிருக்கும் தேர்தல்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற நல்வாழ்த்துகள். மகாராஜ் ஜி உங்கள் ஆட்சி தொடரட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply