யாழில் விபத்து: வயோதிபப் பெண் உயிரிழப்பு!

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே, வயோதிபப் பெண்ணிண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மேலும், அப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply