குடும்பத் தகராறில் மனைவி பலி! – கணவன் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூர் பிரதேசத்தில், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்தார்.

களுவாஞ்சிக்குடி மகளூர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் கணவனை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.

மேலும், குறித்த பெண் தொழிலுக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த 18 நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் தொடர்பில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதிலேயே மனைவி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply