சுமந்திரன் மீது கட்சியின் உறுப்பினர்கள் பகிரங்க குற்றச்சாட்டு! கூட்டமைப்பிற்குள் சர்ச்சை

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டதன் விளைவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி அதிகரித்ததன் காரணத்தினால், சம்பந்தன் தலைமையில் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு சுமந்திரன் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நீண்டகாலமாக நிலவி வரும் நெருக்கடி நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமந்திரனை பகிரங்கமாகக் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.

ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் யாவும் முரண்பாடானவையாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக சுமந்திரன் கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு அழைக்கப்படவில்லை என்பது அத்தகைய கட்சியின் நெருக்கடி நிலமையை மேலும் எடுத்துக்காட்டுவதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply