தமிழகத்தில் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகம் முழுவதும்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல்  4ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள்  ஊடாக 28 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதேபோன்று கடந்த 19 ஆம்  திகதி 2 ஆவது மெகா தடுப்பூசி முகாமும் கடந்த 25 ஆம்திகதி  3ஆவது மெகா தடுப்பூசி முகாமும் நடைபெற்றன.

அந்தவகையில் அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 4 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தற்போது நடைபெறுகிறது.

மேலும், 20 ஆயிரம் முகாம்கள்  ஊடாக 20 இலட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி  செலுத்த தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது.

குறிப்பாக சென்னையில் மாத்திரம் ஆயிரத்து 600 தடுப்பூசி முகாம்கள் செயற்பட உள்ளன. அத்துடன் தமிழக அரசிடம் 25 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply