கோவையில் மருத்துவ மாணவி மாயம்- பொலிஸார் தீவிர விசாரணை

மருத்துவம் படிக்கும் கோவை மாணவி ஒருவர், நள்ளிரவில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தன்யா என்பவரே காணாமல் போயுள்ளார்.

இவர் ரஷ்யாவில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை வந்த தன்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென  காணாமல் போயுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் அவரை தேடிய உறவினர்கள், சி.சி.டி.வி காட்சியை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணி அளவில் வெள்ளை நிற காரில் தன்யா ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய பீளமேடு பொலிஸார், வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply