ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்!

ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு- காஷ்மீர்- கரன்நகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று  படமலோ பகுதியிலும் நேற்று இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும், அனந்த்நாக் பகுதியிலுள்ள பாதுகாப்பு படையினரின் சோதனைச்சாவடியில் நேற்று மாலை பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு படையினர்  தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply