பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பவானிபுர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டபோதிலும் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில்,மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 30 ஆம்  திகதி  நடைபெற்றது.

இதில் மம்தா பானர்ஜி களம் இறங்கி இருந்த பவானிபுர் தொகுதியில் மிகக்குறைந்த அளவாக 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

அந்தவகையில் தற்போது பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மேலும் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், பவானிபூரில் தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார்.

Leave a Reply