ஆளுங் கட்சியுடன் இணையும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையுடன் இந்தக் குழு அரசாங்கத்துடன் இணைவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் அரலிய ஆலய மரத்தடியில் இடம்பெற்ற ஒரு குழுவினருடனான கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்துடன் இணைய போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply