இந்நாட்டின் பாலுற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான Pelwatte dairy, இலங்கையின் பாலுற்பத்தித் துறையை வலுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த வழியில் உள்நாட்டு கேள்வியை பூர்த்தி செய்வதற்காக பால் உற்பத்தியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், விவசாயிகள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவை வழங்கி பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.
பாரிய சமூக மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்ட ஒரு நிறுவனமாக, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் முழு நாட்டுக்கும் அதன் தடையற்ற ஆதரவை வழங்கி வருவதுடன், இது 2006 இல் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து வெளிநாடுகளுக்கு பாலுக்காக செலுத்தப்படவிருந்த 50 பில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகளை சேமித்துள்ளது.
Pelwatte போதுமான பாலுற்பத்திகளை, குறிப்பாக மக்கள் உணவு மற்றும் தயாரிப்புகளை பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில் உற்பத்தி செய்யும் புதுப்பிக்கப்பட்ட நோக்குடன் இயங்கி வருகின்றது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளமை, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்யவும், உள்நாட்டு பாற்பண்ணையாளர்கள், ஆதரவு தொழிற்துறைகள் மற்றும் உள்நாட்டு மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
விவசாயிகளுக்கு கால்நடைகளை வழங்கவும், கொட்டகைகளை தவணை முறையில் செலுத்தக் கூடிய வகையில் வழங்கவும், பாலின் தரம் மற்றும் மாடுகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய பாலுற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சியை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Pelwatte பாலுற்பத்தி செய்யும் சமூகங்களுக்கு திணைக்களங்களுடனான விவசாய நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதுடன், பால் கறத்தல் முதல் குளிரூட்டல் வரை மற்றும் போக்குவரத்து முதல் உற்பத்தி வரையில், விநியோகச் சங்கிலியின் ஆரம்பம் முதல் இறுதி வரை முறையான செயல்முறைகளை நிறுவ உதவுகிறது. இத்தோடு துணை சேவைகளுக்கும் ஆட்களை நியமிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவை அனைத்தும் வரும் மாதங்களில் பால் உற்பத்தியின் உற்பத்தியையும் வளர்ச்சியையும் அதிகரிப்பதற்காகும்.
Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஒரு உள்நாட்டு முன்னணி நிறுவனமாக, பாலுற்பத்திகளை தேடும் ஒவ்வொரு இலங்கையரும் வெறுங்கையுடன் கடைகளை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை ஏற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். நாங்கள் உற்பத்தியை விரிவுபடுத்தி, லொஜிஸ்டிக்கை மேம்படுத்துவதுடன், Pelwatteவின் தனித்துவமான தரத்தை அதன் வழியில் எப்போதும் பாதுகாக்க முயற்சிக்கிறோம்,” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இதனாலேயே, நுகர்வோர், பாற்பண்ணையாளர்கள் மற்றும் துணைத் தொழிற்துறைகளைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை மேற்படுத்தவும், பொருளாதாரத்தின் சமூக-பொருளாதார தரத்தை உயர்த்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம்,” எனக் குறிப்பிட்டார்.
இந்நிறுவனம் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உள்நாட்டு மக்களிடமிருந்து கணிசமான அளவு பாலைப் பெற்று வருவதுடன், அதன் தரம் மற்றும் சுகாதாரம் அப்படியே இருப்பதை உறுதி செய்யும் பரிசோதனையையும் மேற்கொள்கின்றது. இது மட்டுமே இப்பகுதியைச் சுற்றியுள்ள 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளதுடன், அனைத்து சிறிய பாற்பண்ணையாளர்கள் மற்றும் தனியார் பண்ணைகள் ஒரு உத்தரவாதமான கொள்வனவாளர்களை கொண்டிருப்பார்கள் என்பதனையும், அவர்களின் தயாரிப்புகளுக்கு எப்போதும் போட்டி விலை கிடைக்கும் என்பதனையும் உறுதி செய்கின்றது.
இந் நிறுவனம் வள வினைத்திறன், திறன் கட்டமைப்பு ஆகியவற்றில் வலுவாக முதலீடு செய்வதுடன், கால்நடை ஊட்டச்சத்து தொடர்பான பயிற்சித் திட்டங்களை தவறாமல் முன்னெடுக்கின்றது. அவர்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாற்பண்ணையாளர்களை அழைத்து பயிற்சித் திட்டங்களை வழங்குகின்றனர். நன்கு பயிற்சி பெற்ற பண்ணை தொழில் வல்லுநர்கள் பாற்பண்ணையாளர்களுக்கு, தமது பரந்த புல்வெளிகளில் வளர்க்கப்படும் தீவனங்களைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து சேர்க்கைகளுடன் இணைத்து பல்வேறு தீவனங்களின் நடைமுறை பயன்பாடுகளை விளக்கினர்.
பாலுற்பத்தியில் தேசத்தின் தன்னிறைவு முதன்மையான நோக்காக இருக்கும் நிலையில், Pelwatte Dairy பாற்பண்ணையாளர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பங்களை எண்ணற்ற வழிகளில் ஆதரிப்பதுடன், அவர்களை வலுவூட்டி அவர்களின் வளர்ச்சியையும் தேசத்தின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.
இலங்கையின் 100% உள்நாட்டு பால் உற்பத்தியாளரான Pelwatte, அதன் தொடக்கத்திலிருந்து இந்த நாட்டை பாலில் சுயாதீனமாக்க வேண்டும் என்ற கனவால் உந்தப்பட்டு, ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத்தில் விசேட கவனம் செலுத்துகின்றது. இது பெறுமதிச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பைச் சேர்க்க உதவியுள்ளது.