யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

யாழ்ப்பாணம், அடைக்கல அன்னை ஆலயத்தினரின் ஏற்பாட்டில், இன்று இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

‘உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்திசாலை வைத்தியர் எம்.பிரதீபன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இரத்ததான முகாமில், யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலய அருட்தந்தை வேனாட் றெக்ணோ அடிகளாரும் கலந்துகொண்டார்.

மேலும், இந்த இரத்ததான முகாமில் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply