ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை! – கீதா குமாரசிங்க

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு தான் மிகவும் தாழ்மையுடன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ரஞ்சன், கொலைகளையோ, பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களையோ செய்யவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் நான் நாடாளுமன்றத்தில் எனது சகோதர நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

எனினும், அதற்கு பதில் கிடைக்காதது குறித்து கவலையடைக்கின்றேன். ரஞ்சன் எனது சகோதர கலைஞர், அவருடன் திரைப்படங்களில் நான் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளேன். எனினும் அவர் இன்று சிறையில் இருப்பது மனதிற்கு கவலையை ஏற்படுத்துகிறது.

ரஞ்சன் மன்னிப்பு வழங்க முடியாத குற்றங்கள் எதனையும் செய்யவில்லை. எப்படியாவது அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் மிகவும் தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கின்றேன்.

அப்படி அவர் விடுதலை செய்யப்பட்டால், மீண்டும் அவர் கலைத்துறையுடன் இணைந்து பணியாற்றுவார் எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply