நியூ சவுத் வேல்ஸில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்துக்குள் 70 விகிதமானவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மாநில ஆளுநர் கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகிய நிலையில் முடக்க நிலையிலிருந்து வெளியேறும் திட்டத்திற்கு பாதிகாத்து என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply