மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு!

<!–

மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு! – Athavan News

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும், ஆற்றல் படைத்த ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் ஒவ்வொரு கடலோர கிராமங்களுக்காகச் சென்று சோதனையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply