ஆசிரியர் தினத்தன்று வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்த தீர்மானம்!

ஒக்டோபர் 06 ஆம் திகதி வரும் ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்-அதிபர் போராட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 312 பிரதேச கல்வி அலுவலகங்கள் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வரவேண்டும் என்றால் ஊதிய சமத்துவமின்மை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை என்றும், எந்த தடைகள் வந்தாலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர்கள் தயாராக இல்லை என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளர்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply