கூட்டமைப்பை சந்திக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பானது இன்று இலங்கை நேர்ப்படி மாலை 5 மணிக்கு கொழும்பில் இடமபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசியல் தீர்வு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றிரவு சந்தித்துக் கலந்துரையாடியிருந்த இந்திய வெளிவிவகார செயலாளர், இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Leave a Reply