நமது அரசாங்கம் எல்லா நாடுகளிடமும் பிச்சை எடுகின்றது! ராஜித சேனாரத்ன

இந்த அரசாங்கம் நஷ்டமடைந்துள்ளது எனவும் அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை என்றும், அது நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சோரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக அரசாங்கம் எல்லா இடங்களிலும் கடன்பட்டுள்ளது எனவும் எல்லா இடங்களிலும் பிச்சை எடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பங்களாதேஷிடம் இருந்து கடன் வாங்கும் அரசாங்கம், நாளை மாலைதீவிலிருந்தும் கடன் வாங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் வங்கி அமைப்புகளிலும் தற்போது டொலர்கள் இல்லை என்றும் வங்கிகளும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply