கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், விபசார விடுதியொன்று நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டமையுடன், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபசார விடுதியை நடத்தி சென்றவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த நான்கு பெண்கள் உள்ளடங்களாக அறுவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, எப்பாவல, அனுராதபுரம், கொடக்கவெல, பகினிகஹவெள மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 21, 36, 41, 23 மற்றும் 47 வயதுடைய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.