உலகப் புகழ் பெற்றுள்ள யொஹானிக்கு அரச விருது!

உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள நவீன தலைமுறை பாடகி யொஹானி சில்வாவுக்கு அரச விருது வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் ஒரு இலங்கையின் பெயருக்குப் புகழ் சேர்ப்பதற்காக ஒரு கலைஞராக யொஹானி பணியாற்றியுள்ளதாகவும் அவருக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply