இலங்கையில் வெங்காயம்,மிளகாய் இறக்குமதிக்கு தடை?

நாட்டில் அடுத்த வருடம் முதல் வெங்காயம்,மிளகாய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் இவற்றை பயிரிடுவதற்கு அனைத்து வளங்களும் உள்ளன.ஆகவே நாம் மிளகாய் ,வெங்காயம் ஆகியவற்றை இங்கேயே அதிகளவில் உற்பத்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளளோம்.

மிளகாய் உற்பத்தியுடன் அதன் விதை உற்பத்தியும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வடக்கு கிழக்கில் சுமார் 10 ஆயிரம் ஹெட்டயர் அளவில் இந்த செய்கையை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்த நிலையில் அடுத்து வருடம் இவ்வற்றின் இறக்குமதி தடை செய்யப்படும்.மாறாக இதற்காக விவசாயிகளுக்கும் உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளன என தெரிவித்துள்ளார்.

Leave a Reply