பிரதமர் மஹிந்தவுடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பன்முகத்தன்மையுள்ள இந்திய, இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவது குறித்த வினைத்திறன்மிக்க பேச்சுக்களில் இருவரும் ஈடுபட்டனர் என இச்சந்திப்புக் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது.

Leave a Reply